உள்நாடு

ரம்பேவயில் 3 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு, 50இற்கும் மேற்பட்டோர் காயம்

அநுராதபுரம் – மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 2 பஸ்களும் தனியார் பஸ் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *