கிண்ணியாவில் தேசிய ஜனநாயகக் கட்சியின் 6ஆவது பேராளர் மாநாடு
தேசிய ஜனநாயகக் கட்சியின் (NDP) 6ஆவது பேராளர் மாநாடு (08)ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கட்சியின் தலைவரும்
சட்டத்தரணியும், வைத்தியருமான ஹில்மி மஹ்ரூப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், எம் மக்கள் முன்னணி கட்சியின் தலைவருமான கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதிநிதிகள் மற்றும் பேராளர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இம்மாநாடு கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் அமைப்புசார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





(எம்.ஏ.முகமட்)
