கட்டுரை

நூற்றாண்டு கால மனிதகுலத்தின் விண்வெளி ஆராய்ச்சியும் , விண்வெளி பயணமும் ஒரு பார்வை

மனிதர்கள் விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஆனால் உண்மையான விண்வெளி ஆராய்ச்சி 20-ஆம் நூற்றாண்டில் ராக்கெட் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் வேகமடைந்தது.

சுமார் 49 ஆண்டுகளாக Voyager-1, Voyager-2 விண்கலங்கள் பூமியிலிருந்து பிரபஞ்சத்தை ஆராய படம் பிடிக்க பயணித்து வருகின்றன. வாயேஜர்-1 ஒரு ஒளி நாள்(Light Day) தொலைவை (சுமார் 259 பில்லியன் கிலோமீட்டர்) நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.

சுமார் கடந்த 25 வருடங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) மனிதர்கள் தொடர்ந்து வசித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 2000 நவம்பர் மாதம் முதல் இதுவரை 26 நாடுகளைச் சேர்ந்த 298 க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணம் செய்துள்ளனர்.

விண்வெளிப் பயணம், நிலவு ஆராய்ச்சி, செவ்வாய் கிரகப் பயணம், செயற்கைக்கோள்கள் மற்றும் புதிய விண்வெளித் தொழில்நுட்பங்கள் குறித்த சில முக்கிய மைல் கற்களை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.

விண்வெளி வரலாற்றின் முக்கிய மைல்கற்கள்

  1. முதல் செயற்கைக்கோள் – Sputnik-1 (1957)
    1957 ஒக்டோபர் 4ஆம் திகதி சோவியத் ஒன்றியம் உலகின் முதல் செயற்கைக்கோளான Sputnik-1 ஐ விண்ணில் செலுத்தியது. இதன் மூலம் விண்வெளி யுகம் ஆரம்பமானது.
  2. விண்வெளிக்குச் சென்ற முதல் நாய் – Laika (1957)
    1957 நவம்பர் 3ஆம் திகதி Laika என்ற நாயை Sputnik-2 விண்கலத்தில் சோவியத் ஒன்றியம் விண்வெளிக்கு அனுப்பியது. பூமியைச் சுற்றிய சுற்றுப்பாதையை அடைந்த முதல் உயிரினம் Laika ஆகும். ஆனால், அது உயிருடன் பூமிக்குத் திரும்பவில்லை.
  3. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் – Yuri Gagarin (1961)
    1961 ஏப்ரல் 12ஆம் திகதி சோவியத் விண்வெளி வீரர் Yuri Gagarin, Vostok-1 விண்கலத்தில் பூமியை ஒருமுறை சுற்றி, சுமார் 108 நிமிடங்களில் பயணத்தை நிறைவு செய்தார்.
  4. விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் – Valentina Tereshkova (1963)
    1963 ஜூன் 16ஆம் திகதி சோவியத் விண்வெளி வீராங்கனை Valentina Tereshkova விண்வெளிக்குச் சென்றார். சுமார் மூன்று நாட்கள் விண்வெளியில் தங்கிய முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.
  5. விண்வெளியில் நடந்த முதல் மனிதர் – Alexei Leonov (1965)
    1965 மார்ச் 18ஆம் திகதி சோவியத் விண்வெளி வீரர் Alexei Leonov, விண்கலத்தை விட்டு வெளியேறி விண்வெளியில் நடந்த முதல் மனிதர் ஆனார்.
  6. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் – Neil Armstrong (1969)
    1969 ஜூலை 20ஆம் திகதி அமெரிக்காவின் Apollo-11 திட்டத்தின் மூலம் Neil Armstrong, Buzz Aldrin ஆகியோர் நிலவில் தரையிறங்கினர்.
  7. உலகின் முதல் விண்வெளி நிலையம் – Salyut-1 (1971)
    1971 ஏப்ரல் 19ஆம் திகதி சோவியத் ஒன்றியம் Salyut-1 என்ற உலகின் முதல் விண்வெளி நிலையத்தை விண்ணில் செலுத்தியது. விண்வெளியில் நீண்டகாலம் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு இது வழிவகுத்தது.
  8. Voyager-1 மற்றும் Voyager-2 (1977)
    1977ஆம் ஆண்டு NASA இந்த இரண்டு விண்கலங்களையும் விண்ணில் செலுத்தியது. இவை வியாழன், சனி உள்ளிட்ட வெளிக்கோள்களை ஆராய்ந்ததுடன், தற்போது விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
  9. முதல் Space Shuttle Columbia (1981)
    1981 ஏப்ரல் 12ஆம் திகதி அமெரிக்காவின் Space Shuttle Columbia தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி ஓடப் பயணங்களுக்கு இது முக்கியமான தொடக்கமாக அமைந்தது.
  10. செவ்வாயில் தரையிறக்கம்
    1997 ஆண்டு NASA வின் Mars Pathfinder விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது. அதனுடன் சென்ற Sojourner ரோவர் செவ்வாயில் வெற்றிகரமாகச் செயற்பட்ட முதல் ரோவர் ஆகும். 2012 ஆம் ஆண்டு Curiosity Rover செவ்வாயில் தரையிறங்கியது.
  11. Hubble Space Telescope (1990)
    1990 ஏப்ரல் 24ஆம் திகதி NASA ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. தொலைதூர விண்மீன் திரள்கள்(Galaxi), நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் பற்றிய ஆய்வில் இது பெரும் பங்களிப்பைச் செய்து வருகிறது.
  12. James Webb Space Telescope – JWST (2021)
    2021 டிசம்பர் 25ஆம் திகதி ஏவப்பட்ட James Webb Space Telescope, 2022 முதல் பிரபஞ்சத்தை ஆராய்ந்து வருகிறது. தொலைதூர விண்மீன் திரள்கள்(Galaxi), நட்சத்திரங்கள் மற்றும் பிற கோள்களின் வளிமண்டலங்கள் பற்றிய புதிய தகவல்களை வழங்கி வருகிறது.
  13. Nancy Grace Roman Space Telescope
    NASA வின் இந்தத் தொலைநோக்கி, Hubble Space Telescope ஐ விடப் பெரிய விண்வெளிப் பகுதியை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யும் திறன் கொண்டது. இருண்ட ஆற்றல்(Dark Energy), இருண்ட பொருள்(Dark Matter), விண்மீன் திரள்கள் மற்றும் சூரியக் குடும்பத்திற்கு வெளியேயுள்ள கோள்களை ஆராயவுள்ளது. இதனை 2027 மே மாதத்திற்குள் விண்ணில் செலுத்த NASA திட்டமிட்டுள்ளது.
  14. International Space Station – ISS (1998–2000)
    1998 நவம்பர் 20ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் பகுதியான Zarya விண்ணில் செலுத்தப்பட்டது. 2000 நவம்பர் 2 முதல் விண்வெளி வீரர்கள் அங்கு தொடர்ச்சியாகத் தங்கி வருகின்றனர்.
  15. ரஷ்யாவின் புதிய விண்வெளி நிலையம் – ROSS
    ரஷ்யா, Russian Orbital Station (ROSS) என்ற புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் ஆரம்பக் கட்டப் பணிகள் 2027–2028 காலப்பகுதியிலும், முழுமையான கட்டமைப்பு 2030–2033 காலப்பகுதியிலும் நிறைவடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  16. ஜப்பானின் MMX திட்டம் – Phobos நிலவு ஆராய்ச்சி
    ஜப்பானின் விண்வெளி ஆய்வு அமைப்பான Japan Aerospace Exploration Agency (JAXA), செவ்வாயின் நிலவுகளில் ஒன்றான Phobos இலிருந்து மண் மாதிரிகளைச் சேகரித்துப் பூமிக்குக் கொண்டுவர Martian Moons eXploration (MMX) திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2031ஆம் ஆண்டில் மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  17. சீனாவின் விண்வெளி நிலையம் – Tiangong
    சீனா தனது சொந்த விண்வெளி நிலையமான Tiangong ஐ 2022ஆம் ஆண்டு முழுமையாக அமைத்தது. இதில் சீன விண்வெளி வீரர்கள் தங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  18. இந்தியாவின் Chandrayaan-3 (2023)
    2023 ஆகஸ்ட் 23ஆம் திகதி இந்தியாவின் Chandrayaan-3 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. மேலும், Gaganyaan திட்டத்தின் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பவும் தயாராகி வருகிறது.
  19. பாகிஸ்தானின் நிலவு ஆராய்ச்சி முயற்சி (2024)
    பாகிஸ்தானின் ICUBE-Q சிறிய செயற்கைக்கோள், சீனாவின் Chang’e-6 விண்கலத்துடன் 2024 மே 3ஆம் திகதி நிலவை நோக்கிப் பயணித்தது. மேலும், 2028ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள சீனாவின் Chang’e-8 திட்டத்தில் பாகிஸ்தானும் ரோவர் ஒன்றை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
  20. Artemis III – மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டம்
    NASA வின் Artemis திட்டம், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதுடன், எதிர்காலத்தில் நிலவில் நீண்டகாலம் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அடித்தளத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக நிலவில் தேவையான தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் ஆய்வு வசதிகளை உருவாக்க NASA திட்டமிட்டு வருகிறது.
  21. SpaceX – செயற்கைக்கோள் மூலம் நேரடியாகச் செல்போன் இணைப்பு
    எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனம், Starlink Direct to Cell திட்டத்தின் மூலம் சாதாரண செல்போன்களுக்குச் செயற்கைக்கோள் வழியாக இணைப்பு வழங்கி வருகிறது. பாலைவனம், கடல், காடு, மேடுகள் போன்ற தொலைத்தொடர்பு கோபுரங்கள் இல்லாத பகுதிகளிலும், SMS , Voice call மற்றும் intrernet சேவைகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.

விண்வெளித் தொழில்நுட்பமும் ஆராய்ச்சிகளும் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன. ஒரு காலத்தில் கனவுகளாக இருந்த பல விடயங்கள் இன்று நிஜமாகி வருகின்றன. இந்தப் பயணம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கும். எனவே, காலத்திற்கேற்ப புதிய தகவல்களை வாசித்து அறிந்துகொள்வது நல்லது; பின்னர் அவற்றைப் புரிந்துகொள்ளத் திணறுவதை விட இப்போதே தெரிந்துகொள்வது சிறந்தது!

(தமிழில்: ஹரீஸ் ஸாலிஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *