உள்நாடு

தாயிப் பல்கலைக்கழகத்தில் (முப்தி) உயர் கல்வியைத் தொடர சம்மாந்துறையைச் சேர்ந்த இரு மௌலவிமார் தெரிவு

சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியின் பழைய மாணவர்களான இரு மௌலவிமார், சவூதி அரேபியாவிலுள்ள தாயிப் பல்கலைக்கழகத்தில் (Taibah University) இஸ்லாமிய சட்டத்துறையில் உயர் கல்வியைத் (முப்தி) தொடர்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கல்லூரியின் பழைய மாணவர்களான மௌலவி முஹம்மத் அன்வர் சதாத் முஹம்மத் சிஹான் மற்றும் மௌலவி முஹம்மத் ரமழான் அஸ்அத் அஹ்மத் ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

இஸ்லாமிய சட்டத்துறையில் ஆழ்ந்த அறிவையும் புலமையையும் பெற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் முப்திகளாகத் தகைமை பெறுவதை இலக்காகக் கொண்டு தமது உயர் கல்விப் பயணத்தை முன்னெடுக்கவுள்ள இவர்களது தெரிவு, சம்மாந்துறைப் பிரதேசத்தின் மார்க்கக் கல்வி வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

மார்க்கக் கல்வியில் அடிப்படை அறிவைப் பெற்றுக்கொண்ட இளம் தலைமுறையினர் சர்வதேசப் பல்கலைக்கழக மட்டத்தில் உயர் கல்வியைத் தொடர்வதற்குக் கிடைத்துள்ள இவ்வாய்ப்பு, ஏனைய மாணவர்களுக்கும் கல்வி ரீதியான ஊக்கத்தையும் முன்மாதிரியையும் வழங்குவதாக அமைந்துள்ளது.

இவர்களது கல்விப் பயணம் வெற்றிகரமாக அமையவும், இஸ்லாமிய சட்டத்துறையில் சிறந்த புலமையாளர்களாக உருவாகி, எதிர்காலத்தில் தமது அறிவை சமூகத்திற்கும் முஸ்லிம் உம்மத்திற்கும் பயனுள்ள வகையில் அர்ப்பணிக்கவும் தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரி நிர்வாகம் தனது வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துள்ளது.

(தில்சாத் பர்வீஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *