உள்நாடு

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார் யோஷித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, கடற்படையில் இணைவதற்குத் தேவையான கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்யாத நிலையில், கடற்படையில் இணைக்கப்பட்டு பிரித்தானியாவில் சிறப்புப் பயிற்சியைப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் இன்று (13) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த ஆட்சேர்ப்பு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *