உள்நாடு

ஆசிரியர் தொடர்பாடலை விருத்தி செய்ய மாத்தளை செயலகத்தில் செயலமர்வு

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மாத்தளை மாவட்ட ஊடகப்பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் மாத்தளை மாவட்ட பாடசாலைகளில் (ஊடகம்) தொடர்பாடல் கற்பிக்கும் ஆசிரியர்களின் தொடர்பாடல் அறிவை மேம்படுத்தும் நோக்கில் செயலமர்வு ஒன்று அண்மையில் மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எம்.பி. யஹம்பத் மற்றும் கண்டி மாவட்ட ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரி தனூஜா அபயசேகர ஆகியோரினால் தொடர்பாடல் தொடர்பான விரிவுரைகளை ஆசிரியர்களுக்கு இதன் போது வழங்கப்பட்டது.

(மாத்தளை எம்.சதூர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *