உள்நாடு

வெற்றிகரமாய் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 2026

சிறுவர்களைப் பாதுகாப்பதையும், சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதையும், போதைப்பொருள் பாவனையின் ஆபத்துகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 2026 ஒக்டோபர் 09ஆம் திகதி கண்டி – திகன, ராஜவெல்ல பாடசாலையில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய இயக்கத்தின் கண்டி மாவட்ட கிளையினால் வெற்றிகரமாக நடைபெற்றது.

மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறுவர்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியமான எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

இதனை சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய இயக்கத்தின் கண்டி மாவட்ட பணிப்பாளர் திருமதி காயத்திரி மனோஜ் மற்றும் கண்டி மாவட்ட பணிப்பாளர் திருமதி ஹபீஸா மற்றும் இணைப்பாளர்திருமதி நிஷாந்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பங்களிப்பு வழங்கிய ஏற்பாட்டாளர்கள், இணைப்பாளர், பாடசாலை நிர்வாகம் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

சிறுவர்களைப் பாதுகாப்போம்! துஷ்பிரயோகத்தைத் தடுப்போம்! போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்!

(திருமதி காயத்திரி மனோஜ்,
கண்டி மாவட்ட பணிப்பாளர்,
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய இயக்கம்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *