உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (11) பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் மிதமான மூடுபனி நிலவக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *