மகிந்த கஹந்தகம கைது; விசாரணைகள் ஆரம்பம்
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மகிந்த கஹந்தகம மற்றும் அவருடன் மற்றுமொரு நபரும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு குற்றப் தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருள் கையிருப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மகிந்த கஹந்தகம நேற்று இரவு (05) மிரிகான பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மற்றைய நபரும் கஹந்தகமவின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
