உள்நாடு

அனுராதபுரத்தில் ஊடகவியலாளர்களுக்கான போதை விழிப்புணர்வு செயலமர்வு

மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனையினால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் ஊடகவியலாளர்களை தேளிவுபடுத்தும் செயலமர்வு மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் மையத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் அமரநாத் தென்ன தலைமையில் அனுராதபுரம் கார்ட்டன் பார்க் உணவகத்தில் (17) நடைபெற்றது.

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து சமூகத்தை விடுவிப்பதில் ஊடகங்களுக்குள்ளான பொறுப்பு, ஊடகப் பணியின் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.

இலங்கையில் மது பாவனையினால் ஆண்டு தோறும் 20000 பேர் அகால மரணம் அடைகின்றனர். மேலும் சாராயம் உள்ளிட்ட மதுபானங்களை வாங்குவதற்காக தினந்தோறும் சுமார் 96 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

மதுபான நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு வரிகளைச் செலுத்தினாலும் மது அருந்துவதால் நாட்டின் சுகாதார அமைப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் பாதிப்பு அந்த வரி வருவாயைவிட அதிகமாகவுள்ளது என்று மது கட்டுப்பாட்டிடிற்கான முதலீட்டு அறிக்கை 2025 சுட்டிக் காட்டுகிறது.

கடந்த காலத்தில் மதுபானப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் பியர் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் மதுபானப்  பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டலாம்.

எனவே சட்டவிரோத மதுபானத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான சட்டபூர்வ மதுபானத்தின் விலையை அதிகரிப்பது  மட்டுமல்லாது சட்டத்தை முறையாகவும் திறமையாகவும் செயல்படுத்தவும் வேண்டும் .

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *