உள்நாடு

கிரியேட்டிவ் மீடியா நெட் வேர்க்கின் நான்காவது ஆண்டு நிறைவு விழா

கிரியேட்டிவ் மீடியா நெட் வேர்க்கின் நான்காவது ஆண்டு நிறைவு விழா, மாபெரும் விருது வழங்கல் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம் என்பன அண்மையில் (13) குருநாகல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஊடகம், கலை, கல்வி மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிரியேட்டிவ் மீடியா நெட்வேர்க், கிரியேட்டிவ் டிவி, கிரியேட்டிவ் இன்ஸ்டிடியூட் மற்றும் கிரியேட்டிவ் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளரும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஒருங்கிணைப்பாளரும், நிகழ்வின் ஏற்பாட்டாளருமான இஸ்மத் ஹுசைன் ஷாதிப் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக நோட்டரி பப்ளிக் சத்தியப்பிரமாண ஆணையாளர் மற்றும் நிறுவன செயலாளரான சட்டத்தரணி மொஹமட் அஸ்லம் கலந்து கொண்டார்.

இதனுடன் ஊடகம், கல்வி, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

எப்.என்.மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் உரிமையாளரும், கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி மற்றும் சிரச தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் குருநாகல் மாவட்ட செய்தியாளருமான ஏ.டபில்யூ.எம்.பஸ்லான் இதில் முக்கிய அதிதியாக கலந்து கொண்டார்.

ஹெல்ப் ஹேன்ட் ட்ரட்ஸ் லங்கா
நிறுவனத்தின் செயலாளரும், ஒருங்கிணைப்பாளருமான எஸ்.எச்.எம்.ரிஸ்வான், முன்னாள் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் நலன்புரி அதிகாரியான எம்.ஆர்.எம்.பாயிஸ்

ஹெல்ப் ஹேன்ட் ட்ரட்ஸ் லங்கா
நிறுவனத்தின் தலைவி தேச கீர்த்தி பாத்திமா ருக்க்ஷானா, என்.ஜீ.டீ. நிறுவனத்தின் இயக்குனரும், நிறுவனருமான அம்னா ஹலீம் மற்றும் ஸலா பவுன்டேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ரஸ்மியா ஏ சமத்
உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் முக்கிய அம்சமாக, பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளையும் சமூகப் பங்களிப்புகளையும் வெளிப்படுத்திய சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதுடன், புதிய தலைமுறையினருக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

இதனிடையே, நிகழ்வின் மற்றுமொரு முக்கிய சமூகப் பணியாக “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த சமூக உதவித் திட்டத்தின் மூலம், கல்வியைத் தொடர்வதில் பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு ஆதரவளிப்பதுடன், அவர்களின் எதிர்கால இலக்குகளையும் கனவுகளையும் அடைவதற்கு ஊக்கமளிப்பதே இந்த சமூகப் பணியின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

எம்.யூ.எம்.சனூன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *