உலகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வளர்க! ஒளிர்க! உயர்க! வாழ்த்துகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறுவனர் புகழ் ஓங்குக!

தேசிய தலைவர் எல்லோருடைய இதயங்களை கவர்ந்தவர் சர்வதேச நல்லறிஞர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வாழ்த்து

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வளர்க! ஒளிர்க! உயர்க! வாழ்த்துகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறுவனர் புகழ் ஓங்குக!


தேசிய தலைவர் எல்லோருடைய இதயங்களை கவர்ந்தவர் சர்வதேச நல்லறிஞர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கிறேன் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னும் ஜனநாயக அரசியல் இயக்கத்தை உருவாக்கித் தந்த மனிதநேயர், இலங்கைச் சீமைக்கு இறைவன் அருளாகத் தோன்றிய பேரறிஞர் மாண்புயர் எம். எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 26-வது நினைவேந்தல் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் 2026 செப்டம்பர் 16-இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் என் ஆருயிர் சகோதரர் ஆலி ஜனாப் ரவூப் ஹக்கீம் அவர்களின் மேன்மைமிகு தலைமையில் நடைபெறுவதும், அதே சமயத்தில் ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸ் பேராளர்கள் மாநாடும் சிறப்பாக நடைபெறுகிறது என்றும் அறிந்து மிகுந்த மகிழ்வு ஏற்படுகிறது.
ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற முன்னணித் தலைவர், சர்வதேசங்களிலும் தனது அரசியல் ஜானத்தையும் மனிதநேயகத்தையும் தொடர்ந்து பரப்பும் பயணத்தில் திளைத்திருப்பவர் இந்த வரலாற்றுச் சிறப்பு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி இதயங்களை இணைக்கும் இனிய நல் முயற்சியில் ஈடுபடுவது மிகுந்த வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் உரியதாகும்.

இந்த வரலாற்று நிகழ்வில் தமிழக அரசியல், முதல் முறையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அமைச்சராகியிருக்கும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ஏ.எம். ஷாஜஹான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார் என்பதை அறிந்து பெரிதும் மகிழ்கிறோம். இந்திய வரலாற்றில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்னும் பெயரில் இந்திய முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன் பேசும் அரசியல் இயக்கத்தை கண்ணியமிகு காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் உருவாக்கித் தந்தார்கள்.
இது 1948 மார்ச்சு 10ஆம் நாளில் சென்னை ராஜாஜி மண்டபத்தில் நிகழ்ந்தது. இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரின் குரலாகத் திகழ்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிறப்பெடுத்தது போலவே, ஸ்ரீலங்கா நாட்டில் வாழும் சிறுபான்மையினர் நலன்களைப் பேணி காத்திடவும் அதே சமயத்தில் ஸ்ரீலங்கா தேச அரசியல் சாசனத்தை முன்னிறுத்தியும் முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்திடவும் எல்லா சமுதாய மக்களுடனும் சகோதரத்துவ வாஞ்சையுடன் ஒன்றித்து வாழ்வதற்கு வழி காட்டவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டு வரலாறு படைத்து வருகிறது.

சிந்தனை செல்வராகத் திகழ்ந்த அஷ்ரப் அவர்களின் வழி நின்று இன்றைய தேசியத் தலைவர் ஆலி ஜனாப் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழ் பேசும் ஜனநாயக அரசியல் இயக்கங்களை ஒன்றிணைத்து அறிய அற்புதமான ஜனநாயகப் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரின் பயணம் வெற்றிப் பயணமாக இறையருள் துணை புரிய வாழ்த்துவோம்.

ஸ்ரீலங்கா ஆதிமனித அவதாரம் நிகழ்ந்த புனித பூமி என்பது உலகத்தவர்களின் ஆன்மீக நம்பிக்கையாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (உறவினர்) `ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் பொதுமைக் கருத்துக்கள் வேரூன்றிய பூமியாக ஸ்ரீலங்கா என்றும் திகழ்கிறது.
இவ்வகைச் சீமையில் இருந்து எழும் இந்த ஆன்மீக ஒளிவுலகம் முழுவதும் பயணிக்கவும் பரவவும் ஒன்றிணைவோம்! இடங்களால் வேறாக இருந்தாலும் இதயங்களால் ஒன்றாகும்! பூவுலகமே புவன பூமியாக இதயங்களை இணைப்போம்! ஒன்றுபடுவோம்! நன்றி செய்வோம்! வாழ்க எல்லோரும்! வளர்க எல்லோரும்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வளர்க! ஒளிர்க! உயர்க! வாழ்த்துகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறுவனர் புகழ் ஓங்குக! இன்று வழிநடத்தும் தேசிய தலைவர் எல்லோருடைய இதயங்களை கவர்ந்தவர் சர்வதேச நல்லறிஞர் ஆழி ஜனாப் ரவூப் ஹக்கீம் அவர்களின் பணி சிறக்கவும் அவருடன் பயணிக்கும் அருமை சகோதரர்கள் அனைவரின் நலத்துக்கும் வளத்துக்கும் நீடித்த நல்வாழ்வுக்கும் இறையருள் சூழ்க! வெல்க! வஸ்ஸலாம். இவ்வாறு பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *