75 இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சிக் கட்டணம் செலுத்த உதவிய முஸ்லிம் எயிட் நிறுவனம்.
Muslim Aid, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் கடந்த 20 வருடங்களாக இலங்கையில் பல்வேறு இயற்கை அனர்தம் சமுக சேவை, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சகல குடும்பங்களுக்கு உதவி வருகின்றது.
இந் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஏ.சி பைசர் கான் தலைமையில் நேற்று 12.09.2026. கொலன்னாவ மங்களாய கூட்ட மண்டபத்தில் திறன் மேம்பாட்டு மற்றும் வலுவூட்டல் தொழிற் பயிற்சி நெறிகள் தெரிவு செய்யப்பட்ட கொலன்னாவை பிரதேசத்தில் வாழும் 75 மாணவ மாணவிகளுக்கு பயிற்சிக்கான கட்டணம் செலுத்த லுக்காக அனுசரனை வழங்கும் வைபவம் நடைபெற்றது
.500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட 75 இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் தெரிவு செய்யப்பட்ட பயிற்சி நெறிகளுக்கு அனுசரணை வழங்கி அரசினால் பதிவு செய்யப்பட்ட தனியார் தொழிற்பயிற்சி கல்வி நிறுவனங்களின் இம் மாணவர்களுக்கான பயிற்சி பயிலுவதற்கான கடிதங்களை கையளித்தது.
அந்த வகையில் இம் மாணவிகள் ஒர் வருடத்திற்குள் இப் பயிற்சி நெறிகள் வெற்றிகரமாக முடித்து இலகுவில் தொழிலொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான தாதியர் பயிற்சி நெறி, கணினி தகவல் தொழில்நுட்பம், ஹோட்டல் முகாமைத்துவம், ஆட்டோமொபைல், மற்றும் குளிர்சாதன இயந்திரங்கள் திருத்தும் பயிற்சி நெறிகளுக்கான தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் முழுமையான பயிற்சி நெறிக்கான முழுப் பணத்தை அந்த நிறுவனத்திடம் கையளித்துள்ளது.
பாடசாலையை விட்டு வீடுகளில் தங்கியிருந்த இம் மாணவர்கள் இப் பயிற்சி நெறிகள் பயின்று கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தாதியர் களாகவும், கொழும்பில் உள்ள ஹோட்டல் முகாமைத்துவம், மற்றும் வாகனம் திருத்துதல் பயிற்சிகளை வெற்றிகரமாக பயின்று தொழில் பெற்று தனது குடும்பத்தையும் , ஏனைய சகோதரர்கள் வாழ்வாதாரத்திற்கும் ஓர் உந்து கோலாக நிற்கவே இவ்வாறு உதவி அளிக்கிறது.
முஸ்லிம் எயிட் நிறுவனம் என அதன் இலங்கைக்கான பணிப்பாளர் பைசர் கான் கூறினார். இந் நிகழ்வின்போது பிரதம அதிதியாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் எம்.ஏ.எப் அர்சத் கலந்து கொண்டார் முல்லேரியாவ கொத்தொட்டுவ பிரதேச சபைத் தலைவர் தனுஷ்க பிரியதர்ஷன
இப்பயிற்சிகளை வழங்கும் கல்வி நிறுவன பணிப்பாளர்கள் மாணவர்களின் பெற்றோர்கள், கொலன்னாவை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜே.ஜே. பௌன்டேசன் தலைவர் ஹனிப் ஹாஜி, மற்றும் கொலன்னாவை பள்ளிவாசல் தலைவர் பயிருஷ் ஹாஜி, மற்றும் வரவேற்புரை முஸ்லிம் எயிட் ஜூனுத் சஜீர் ஆகியோர் உரையாற்றினார்கள்.













அஷ்ரப் ஏ சமத்
