உள்நாடு

வடமத்திய ஆளுனர் தலைமையில் அனுராதபுரம் சாஹிரா வில் மீலாத் விழா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் மீலாதுன் நபி விழா அனுராதபுரம் சாஹிரா கல்லூரியில் (09) நடைபெற்றது.

இதில் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்தி பிரிவினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்பிரிவின் கல்விப் பணிப்பாளர் மேஜர் என்.டி.நசுமுதீன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த முஸ்லிம் பாடசாலை களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி இஸ்லாமிய பண்பாட்டின் பல்வேறு கலாசார கூறுகளை வெளிப்படுத்திய மை குறிப்பிடத்தக்கது.

அதன் படி அனுராதபுரம் சாஹிரா கல்லூரி , அனுராதபுரம் கட்டுகலியாவ முஸ்லிம் மகா வித்தியாலயம், முல்லைத்தீவு தண்ணிரூட்டு முஸ்லிம் மகா வித்தியாலயம் , கம்பளை சாஹிரா கல்லூரி , மதவாச்சி அல் மதீனா முஸ்லிம் மகா வித்தியாலயம் ,  புத்தளம் சாஹிரா கல்லூரி , கல்பிட்டி நுரச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம் , வுவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம் , மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் கல்கமுவ முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களின் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் போது வடமத்திய மாகாண பிரதம செயலாளர் ரஞ்சன் ஜயசிங்க ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் அனுராதபுரம் சாஹிரா கல்லூரி அதிபர் ஜே.ஏ.ஆசாத் மொஹமட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *