கிண்ணியா எழுத்தாளர் எஸ்.பாயிஸா அலிக்கு தேசிய சாஹித்யரத்ன விருது வழங்கல்

2026 ஆம் ஆண்டுக்கான இலக்கியவாதிகளை கௌரவிக்கும் அரச இலக்கிய விழா நிகழ்வு கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (8) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கிண்ணியாவைச் சேர்ந்த எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியையுமான எஸ்.பாயிஸா அலிக்கு ‘பேரன்பே’எனும் சிறந்த தமிழ்க் கவிதைத் தொகுதிக்கான தேசிய சாஹித்யரத்ன விருதினை கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி (8)வழங்கி வைத்தார்.
(எம்.ஏ.முகமட்)
