மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற இலக்கத்தகடு
இலங்கையில் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட பதிவு எண்கள் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த புதிய பதிவு எண்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகுமென மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷாரா பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏனைய வாகனங்களுக்கு வழக்கம்போல் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் பின்னணியிலான பதிவு எண்கள் தொடர்ந்து வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, 2026 ஜூன் 10 முதல் ஓகஸ்ட் 31 வரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 56,233 வாகனங்கள் மற்றும் 2023, 2024ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 32,507 வாகனங்கள் உள்ளிட்ட மொத்தம் 88,740 வாகனங்களுக்கான புதிய பதிவு எண்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
தயாரிக்கப்பட்டுள்ள புதிய பதிவு எண்களை நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் போக்குவரத்து சபை அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
