உள்நாடு

சாமர சம்பத்தின் பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது

இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறையான அனுமதியின்றி பொஸ்பேட் ஏற்றுமதி செய்ய சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு உதவியதன் மூலம் இலஞ்சமாகப் பணம் பெற்றுக் கொண்டமை மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் குறித்த இருவருக்கும் எதிராக இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இன்றைய தினம் இந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினரும் அவரது தனிப்பட்ட செயலாளரும் ஒரு வழக்கு தொடர்பில் சமர்ப்பித்த பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *