உள்நாடு

கிண்ணியா மீலாத் விழாவில் ராகுல தேரர் பங்கேற்பு

கிண்ணியா மகரூ கிராமத்தில் உள்ள ஆயிஷா பள்ளிவாயலில் ஏற்பாட்டில் இடம் பெற்ற மீலாதுன் நபி விழா சிறப்பாக நேற்றுமுன்தினம் (29)இடம் பெற்றது.

இதில் பிரதம அதிதியாக பௌத்த மதகுரு ராகுல தேரர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன் போது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் தொடர்பில் மீலாதுன் நபி விழா தொடர்பிலான சிறப்பு பேச்சும் இடம் பெற்றன.

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ராகுல தேரரின் இப் பயணம் அமைந்ததுடன் தமிழ் மொழி மூலமாக சிறப்பு பேச்சினை குறித்த பௌத்த மதகுரு நிகழ்த்தினார்.
இதன் போது பங்குபற்றிய சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் பள்ளி மகல்லாவாசிகள்,பள்ளி நிருவாகிகள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *