உள்நாடு

கல்முனை சந்தாங்கேணி உள்ளக விளையாட்டு அரங்கின்  வேலைக்கான ஆரம்பிப்பு விழாவும், நீச்சல் தடாகத்தினை உத்தியோக்பூர்வமாக திறந்து கையளிக்கும் நிகழ்வும்

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கின் 104 மில்லியன் செலவில் அடுத்த கட்ட வேலைக்கான ஆரம்பிப்பு விழாவும், நீச்சல் தடாகத்தினை உத்தியோக்பூர்வமாக திறந்து கையளிக்கும் நிகழ்வு இன்று (30)இடம் பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவருமான  பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கலந்து கொண்டு சந்தாங்கேணி உள்ளக விளையாட்டு அரங்கின் 104 மில்லியன் செலவில் அடுத்த கட்ட வேலைக்கான ஆரம்பிப்பு விழாவும், நீச்சல் தடாகத்தினை உத்தியோக்பூர்வமாக திறந்து வைத்தார்.

மேலும் இதன் போது கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ்,கல்முனை முஹ்யித்தீன் ஜும் ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் தலைவர் எம்.ஐ.அப்துல் அஸீஸ், மாநகரசபை அதிகாரிகள்,விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பிரஜா சக்தி தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டம் தொடர்பாக (Proposal )முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை அமைப்பாளருமான எம்.ஜ.எம். அப்துல் மனாப் அவர்களினால் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களிடம் கையளித்தார்.

நிகழ்வின் இறுதியாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோருக்கு விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் நினைவு சின்னம் பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர் .

( எம்.என்.எம்.அப்ராஸ் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *