உள்நாடு

SAARC மனித உரிமைகள் அமைப்பின் புத்தளம் மாவட்டத் தலைவியாக சுபியானி நியமனம்

கொழும்பில் இடம்பெற்ற SAARC Human Rights Foundation – Sri Lanka Chapter ஏற்பாடு செய்த மாவட்டத் தலைவர்களின் பிரதிநிதிகள் கூட்டம் மற்றும் அமைப்பின் இரு வருட இதழான Bi-Annual Magazine வெளியீட்டு விழாவில், புத்தளம் மாவட்டத் தலைவியாக நியமிக்கப்பட்ட எம். எப். பாத்திமா சுபியானிக்கு அமைப்பின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையும் நியமனக் கடிதமும் வழங்கப்பட்டன.

கொழும்பு YMBA வளாகத்தில் அமைந்துள்ள Ruhunu Food Center இல் நடைபெற்ற இந்நிகழ்வில், பங்களாதேஷைச் சேர்ந்த SAARC Human Rights Foundation இன் மத்திய பொதுச் செயலாளர் பேராசிரியர் Abed Ali சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

புத்தளம் மாவட்டத் தலைவியாக தமக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பின் ஊடாக, மனித உரிமைகளைப் பாதுகாத்தல், சமூக நீதியை மேம்படுத்துதல், பின்தங்கிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் உரிமைகளை முன்னிறுத்துதல், பெண்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை வலுப்படுத்துதல், சமூக நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தவுள்ளதாக எம்.எப். பாத்திமா சுபியானி தெரிவித்தார்.

மேலும், புத்தளம் மாவட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், சமூகப் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகள், சமூக நீதி மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைப்பின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது புதிய பொறுப்பின் மூலம் புத்தளம் மாவட்ட மக்களின் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான குரலை வலுப்படுத்துவதுடன், மக்களின் பிரச்சினைகளை உரிய மட்டங்களுக்கு எடுத்துச் சென்று, மனித உரிமைப் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நியமனம் புத்தளம் மாவட்டத்தில் மனித உரிமைகள், சமூக நீதி, சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கியமான வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SAARC Human Rights Foundation – Sri Lanka Chapter ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், அமைப்பின் தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *