உள்நாடு

42 ஆவது தேசிய மிலாதுன்- நபி அரச பெருவிழா!காமச்சோடை ஜும்மா பள்ளிவாசலில் மர நடுகை நிகழ்வு

42 ஆவது தேசிய மிலாதுன்- நபி அரச பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூக சேவை நிகழ்ச்சிகளின் தொடராக , இன்று ஞாயிற்றுக்கிழமை (23) முற்பகல் 10 மணியளவில் நீர்கொழும்பு காமச்சோடை ஜும்மா பள்ளிவாசலில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இது நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்,
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, நீர்கொழும்பு மேயர் சாமர பெர்னாந்து , பிரதி மேயர் பஷீர் முஹம்மத் , முஸ்லிம் சமய, கலாச்சார விவகார திணைக்கள உதவிப் பணிப்பாளர் அப்ரூவல் அஹமத் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

(நீர்கொழும்பு நிருபர் எம்.இஸட். ஷாஜஹான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *