உள்நாடு

நாடு முழுவதும் ஜனாதிபதி தலைமையில் விஷேட பொதுக் கூட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) விசேட பொதுக்கூட்டங்கள் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் செப்டம்பர் 5 முதல் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கூட்டங்களுடன் இணைந்து, கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் தேர்தல் தொகுதிக் குழுக்களை மீளமைக்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள், தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், கிராம மற்றும் கிராம உத்தியோகத்தர் மட்டத்திலிருந்து தேர்தல் தொகுதிக் குழுக்களை மீளமைத்து வருகிறோம்.

செப்டம்பர் 5 முதல் ஜனாதிபதியின் தலைமையில் மாவட்டங்களில் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. 

முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இல்லத்தில் இரவோடு இரவாகச் சதித் திட்டங்களைத் தீட்டுவதை விட்டுவிட்டு, மக்களைத் திரட்டி வீதிக்கு இறங்கி பொதுக்கூட்டங்களை நடத்துமாறு எதிர்த்தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கருத்து இருந்தால், அதனை நிரூபித்துக் காட்டுமாறு கூறுகிறோம். செய்ய வேண்டியது அவ்வளவுதான். நாங்கள் எதிரணியில் இருந்தபோது முன்னெடுத்த வேலைத்திட்டத்தையாவது அவர்கள் பார்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *