தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக மீளப்பெறமுடியாத சமஷ்டி தீர்வை தாருங்கள் _வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு




தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக சமஷ்டி தீர்வை பெற்றுத்தாருங்கள் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி-வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று (22) திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று இடம் பெற்றன.
இதில் சிவில் சமூக பெண் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிலையான அரசியல் தீர்வுக்கான 100நாட்கள் செயல்முனைவின் நான்காவது வருட அணி திரளல் நிகழ்வாக இது காணப்படுகிறது .
இது தொடர்பில் ஊடக சந்திப்பின் போது இவ்வாறு கூறியுள்ளார்கள்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் 13ஆவது திருத்தச் சட்டம் என்பதும் அப்படியே தான் உள்ளது தமிழர்களுக்கான அரசியல் தீர்வில்லாமல் காணப்படுகிறது தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல எங்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி நிற்கிறோம் மீளப்பெறமுடியாத அரசியல் சமஷ்டி கோரிக்கையை கேட்கிறோம். சமஷ்டி கோரிக்கையை 1951ல் முன்வைக்கப்பட்டு 75வருடங்கள் கடந்துள்ளது.
வடகிழக்கில் நில அபகரிப்பு,புறக்கணிப்பு என தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள மக்கள் குடியேற்றம் படுகிறார்கள். மத்திய மாநில இறைமை பகிரப்பட வேண்டும். இறைமை பகிரப்பட்டால் தான் உரிமைகளை பாதுகாக்க முடியும் என்ற கோரிக்கையை இங்கு நாம் வலியுறுத்துகிறோம் என்றார்கள்.
(ஹஸ்பர் ஏ ஹலீம்)
