உள்நாடு

சவூதி ஸாஹிரா பழைய மாணவர் சங்கம் கொழும்பு ஸாஹிரா Edexcel பிரிவுக்கு அச்சு இயந்திரம் அன்பளிப்பு

கொழும்பு – மருதானை, ஸாஹிராக் கல்லூரியின் கல்வி வளங்களை வலுப்படுத்தும் நோக்கில், சவூதி அரேபியாவிலுள்ள கொழும்பு ஸாஹிராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சவூதி அரேபியாக் கிளை, கல்லூரியின் புதிய Edexcel சர்வதேச பாடத்திட்டப் பிரிவுக்கு அச்சு இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்த அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு, ஆகஸ்ட் 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை, கல்லூரி அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கார், சவூதி அரேபியாக் கிளையின் அதிகாரிகளிடமிருந்து அச்சு இயந்திரத்தைப் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில், சங்கத்தின் தலைவர் எம். தவுசீப் பள்ளி சார்பில் நிறுவனர் தலைவர் எம். அஃப்கார் ஹஸன், துணைத் தலைவர் என். நுஹுமான் கலீல், ஆசிரியர் ஏ. அஃப்ஹம் அஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் துணை அதிபரும் ஆங்கிலப் பிரிவுத் தலைவருமான ஸீனத் இஸ்மாயில், Edexcel பிரிவுத் தலைவர் ஃபர்ஷா ரூமி மற்றும் பெற்றோர் சார்பில் கொழும்பு ஸாஹிரா பழைய மாணவர் சங்கச் செயலாளர் டாக்டர் எஸ். ஷஃப்ராஸ் சலீம் ஆகியோரும் பங்கேற்றனர்.

2015 ஆம் ஆண்டு ரியாத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஸாஹிராவின் சவூதி அரேபியாக் கிளை, சவூதி அரேபியா முழுவதும் வசிக்கும் ஸாஹிரா பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து, கல்லூரியின் வளர்சிக்கு தொடர்ந்தும் பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *