கொலம்பிய பேரழிவுகள்; கவலை தெரிவித்த இலங்கை அரசு
கொலம்பியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவு, அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் கவலை வௌியிட்டுள்ளது.
இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், கொலம்பியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவு, அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதங்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது என வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது சிந்தனைகளும் பிரார்த்தனைகளும் உரித்தாகுகின்றன.
இந்தத் துயரமான வேளையில் கொலம்பியா மக்களுடனும் இலங்கை ஒற்றுமையாக துணை நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
