மூன்று மாத காலத்துக்கு எரிபொருள் மானியம்.அமைச்சரவை ஒப்புதலுக்கு நாளை சமர்ப்பிப்பு. கம்பஹா கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு.

அடுத்த மூன்று மாத காலப்பகுதிக்கு எரிபொருள் மானியம் வழங்குவது தொடர்பான யோசனை நாளை (28) அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் நோக்கம் எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைப்பதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவில் இன்று (27) நடைபெற்ற ‘ஈராண்டு ஆட்சி – நாட்டிற்கு மாட்சி’ மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் கூறியுள்ளார்.
அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன், எரிபொருள் மானியத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
