திறந்து வைக்கப்பட்டது லக்கல நீர் விநியோகத் திட்டம்
கிளீன் ஸ்ரீலங்கா கொள்கை திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அத்தம தேசிய வேலை திட்டம் கு/ரிதிகம பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் பிரதான நிகழ்வு தெலும்புகல்ல முஸ்லிம் கிராமத்தில் தெலத்துவத்த மஸ்ஜித் வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எம். அஸ்லம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அத்தம தேசிய வேலை திட்டத்தை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தெலும்புகல்ல வீதியோரங்களில் மரநடுகையும் சிரமதான பணியும் மூலம் இப்பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாகவும் போதை பொருள் விழிப்புணர்வு தொடர்பாகவும் பொது மக்களுக்கு இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ரித்திகம பிரதேச சபை தலைவர் சுமன தாச பிரதேச செயலாளர் விக்ரம சூரிய, மதுரா கூட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதிகாரி, இராணுவம் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகள் மக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
(மாத்தளை எம் . சதூர்தீன்)
