உள்நாடு

ஒரு மாத காலத்துக்குள் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்; பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில், 2,723 பரீட்சை நிலையங்களில் இன்று (9) இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இதற்கிடையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகி செப்டம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இந்தப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,532 நிலையங்களில் நடைபெறவுள்ளது.

மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *