உள்நாடு

எவ்வித தடங்கள் களுமின்றி இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சை; அனைவருக்கும் நன்றி தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர்

இன்று (09) நாடளாவிய ரீதியில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான 5ஆம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதுவித தடங்கள்களுமின்றி நடைபெற்றுள்ளது.

இந்த வகையில் தலை நகர் கொழும்பிலும் பல நூற்றுக்கணக்க பரீட்சை நிலையங்களில் நடைபெற்றுள்ளது. கொழும்பு 12 பண்டார நாயக்க மாவத்தையில் அமைந்துள்ள பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரி மற்றும் கணபதி இந்து மகளீர் மகா வித்தியாலயம்; ஆகிய பாடசாலைகளில் மாணவர்கள் பரீட்சை எழுதிவிட்டு மகிழ்ச்சிக் களிப்பில் வரும்போதான காட்சிகள். மாணவர்கள் பரீட்சைக்கான வினாக்களுக்கு நல்ல முறையில் விடை எழுதியதாகவும் இம்முறை வினாத்தாள்கள் விடை எமுதக்கூடியதாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 2723 பரீட்சை நிலையங்களிலும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை எந்தவித தடங்கள்களுமின்றி சிறப்பாக இடம்பெற்றதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளதுடன் பரீட்சை சிறப்பாக இடம்பெற ஒத்துழைத்த அனைவருக்கும் அவர் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *