ஜஃப்னா ,காலி அணிகள் போதும் எல்.பீ.எல். இறுதிப் போட்டி
லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று (08) இரவு 7.30 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் மற்றும் கோல் கெலன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன.
லீக் சுற்றின் முடிவில் ஜஃப்னா கிங்ஸ் முதலிடத்தையும் கோல் கெலன்ட்ஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
முதலாவது தகுதிகாண் போட்டியில் கோல் கெலன்ட்ஸை வீழ்த்திய ஜஃப்னா கிங்ஸ் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனையடுத்து, இரண்டாவது தகுதிப் போட்டியில் கொழும்பு கெப்ஸ் அணியை வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ், இறுதிப் போட்டியில் ஜஃப்னா கிங்ஸை எதிர்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
