குளிர் பிரதேசத்தை மேலும் குளுமையாக்கும் புனரமைக்கப்பட்ட கந்தப்பொளை தேயிலை மலை பள்ளி நாளை திறந்து வைக்கப்படுகிறது.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள கந்தப்பொளை தேயிலை மலை புணர் நிர்மாணம் செய்யப்பட்ட மஸ்ஜித் பலாஹ் பள்ளிவாசளின் திறப்பு விழா 2026 ஆகஸ்ட் மாதம் 7 ம் திகதி வெள்ளிக்கிழமை (07.08.2026) காலை 11 மணிக்கு பள்ளிவாசல் நிருவாக சபை தலைவர் அப்துல் காதர் நியாஸ் தலைமையில் இடம்பெறுவதோடு நிகழ்வில் கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்பள்ளிவாசளை திறந்து வைக்கவுள்ளார். இதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
முஸ்லிம்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பள்ளிவாசல் அடிப்படைத் தேவைகளோடு பள்ளிவாசல் ஒன்றும் மிகவும் இன்றியமையாத தேவையாக அமைந்து விடுகிறது. அதற்கடுத்தே குர்ஆன் மத்ரஸா பாடசாலை என்று இதர தேவைகள் தொடர்வதே யதார்த்தமாகும்.
சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அதாவது 1989 ஆம் ஆண்டுகளில் நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பொல பகுதியில் மிகவும் சிறியளவிலான முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அங்கு அப்போதிருந்த முஸ்லிம் முன்னோடிகளால் அன்றைய தேவையைக் கருத்திற்கொண்டு சிறியளவிலான பள்ளிவாசல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.
அந்தப் பள்ளி காலத்தின் தேவை கருதி அண்மைக்காலம் வரை இரண்டொரு தடவை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வந்தது. அப்பள்ளிக்கு இன்று அகவை ஐந்தை நெருங்கும் இச்சந்தர்ப்பத்தில் மக்கள் தொகை அதிகரித்து ஊரும் கிராமமும் வளர்ச்சி கண்ட ஊராக இப்பள்ளி மஹல்லா உருவாகியுள்ளது. இதனால் பள்ளிவாசல் விஸ்தரிப்போடு புனர் நிர்மாணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை நிறைவேற்ற வழிவகைகளைத் தேடி மஹல்லா மக்கள் ஆழ்ந்த யோசனையிலும் கவலையுடனும் அல்லாஹ்விடமே பொறுப்புச்சாட்டி பொறுமையுடனும் இருந்த வேளையிலேயே பகாரபகாரியும் சேவைச் செம்மலுமான ஒரு பெருந்தகை ஒருவரின் தொடர்பு ஏற்பட்டது அவரே தென் இலங்கையின் முகவாயிலுள்ள அளுத்கம தர்ஹா நகரைச் சேர்ந்த கலாநிதி நஜீப் பின் அமீர் ஆலிம் என்ற பெருந்தகையே. எல்லாம் வல்ல அல்லாஹ்வே இவவைஅனுப்பிவைத்தான் என்பதே பொருத்தமானதாகும்.
பள்ளி புனரமைப்புப் பணி – சத்தியமான பின்னணி
2025 ஆம் ஆண்டு ஏற்பட்ட தித்வா புயலும் அதனைத் தொடர்ந்து உருவான வெள்ளப் பெருக்கு காலும் இலங்கையின் சில பகுதிகள் பாதிப்புக்குள் லாகின. அப்போது பாதிக்கப்பட்ட – பகுதிகளுக்குப் பாதிக்கப்படாத பகுதிகளிலிருந்து நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டன. அப்போது தென் இலங்கை வெலிகமப் பகுதியிலிருந்து முஹம்மத் அஸ்வர் மபாஸ் சேர் உள்ளிட்ட குழுவினர் நுவரெலியா கந்தபொல பகுதிக்கு நேரில் வந்து உலருணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. அந்த சந்தர்ப்பத்தில் அவர் கந்தப் பொல தேயிலைத் தோட்டத்தில் அமையப் பெற்றுள்ள மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளி வாசல் அப்போத்துள்ள நிலமையை அவதானித்து தெரிந்தவர்களின் உதவியை நாடி அதனைப் புனரமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மேற்படி பள்ளி நிர்வாகத் தலைவர் அப்துல் காதர் நியாஸிடம் தனது எண்ணத்தை வெளியிட்டார். பின்னர் அவர் ஹபுகஸ்தலாவையை சேர்ந்த பஸ்லி ஹாஜி யார் என்பவரிடம் விடயத்தை எத்திவைத்துள்ளார் பஸ்லி ஹாஜியாரே பரோபகாரி கலாநிதி நஜீப் ஹாஜியாரை நாடியுள்ளார். அதனைச் செவியேற்ற நஜீப் ஹாஜியார் 2025 டிசம்பர் 26 ஆம் திகதி பஸ்லி ஹாஜியாருடன் கந்தப் பொல பகுதிக்கு விஜயம் செய்து குறித்த பள்ளி வாசலைப் பார்வையிட்டு அதன் புனரமைப்புத் தேவையை நிறைவேற்றிக் கொடுக்க உறுதிபூண்டுள்ளார்.

தரிதமாக மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள்
நஜீப் பின் அமீர் ஆலிம் அவர்கள் சேவைச் செம்மல் மட்டுமல்ல, சாதனைச் செம்மலும் கூட. கந்தப்பொல மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலைப் புனரமைத்துக் கொடுக்க உறுதி பூண்டதைத் தொடர்ந்து துரிதமாக செயலிலும் இறங்கினார்.
விஸ்தரிப்பு,புனரமைப்பு என்று செயற்திட்டங்கள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக ஓராண்டுக்குள்ளேயே திட்டம் பூர்த்தியாகியது. 2026 ஆகஸ்ட் 7ஆம் திகதி புனர்நிர்மாணம் பெற்ற மஸ்ஜிதுல் பலாஹ்வின் திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அல்-ஹம்துலில்லாஹ்.
மேற்படி பள்ளிவாசலின் நிர்வாக சபைத் தலைவர் அப்துல் காதர் நியாஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு சமய, சமூக நலன்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் கலாநிதி நஜீப் பின் அமீர் ஆலிம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, புனர் நிர்மாணம் பெற்ற பலாஹ் பள்ளியைத் திறந்து வைக்கிறார், வெள்ளிக்கிழமை என்பதால், அன்றைய தினம் பிதன் முதலாவது ஜம்ஆ தொழுகையிலிருந்து மக்கள் பாவனைக் காகத் திறந்து வைக்கப்படுகிறதுமௌலவி முஹம்மது நியாஸ் (உஸ்மானி) ஜூம்ஆ குத்பா பிரசங்கம் நிகழ்த்தவுள்ளார். இப்பள்ளியின் பேக்ஷ் இமாம் காதர் ஹஸனி முபாரக்(ஹாக்ஷிமி) துஆ பிரார்த்தனையை நடத்தி வைப்பார்.
இந்நிகழ்வில் பிரதேசத்தின் மற்றும் அயலகப் பகுதி, வெளியூர் மார்க்க அறிஞர்கள், மஹல்லாமுக்கியஸ்தர்கள், மத்ரஸா மாணவர்கள், பொது மக்கள் என்று ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளார்கள்.
பள்ளிவாசல் புணரமைப்பு பணியில் முழு மூச்சுடன் செயல்பட்ட பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அப்துல் காதர் நியாஸ் உட்பட உறுப்பினர்கள், பள்ளிவாசல் இமாம் மற்றும் ஜமாத் தார்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூறவேண்டும்.
கந்தப்பொல மஸ்ஜிதுப் பலாஹ் – ஆரம்பகால வரலாற்றுச் சுருக்கம்
மேற்படி பள்ளிவாசலின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்பதற்கு முன்னர், பள்ளி அமையப் பெற்றுள்ள கந்தப்பொல தேயிலைத் தோட்டப் பிரதேசத்தின் இன, மத, கலாசார பண்பாடுகள் குறித்து சிறிது கண்ணோட்டத்தைச் செலுத்துவது நல்லது.
தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் என்று மூவின மக்களும் இரண்டறக் கலந்து வாழும் மலையக தேயிலைத் தோட்டப் பிரதேசமே கந்தப்பொல. 1989 ஆம் ஆண்டு இங்கு பள்ளிவாசல் முதன் முதலாக, தோற்றம் பெற்ற போது இங்கு விரல் விட்டெண்ணக் கூடிய முஸ்லிம் குடும்பங்களே இருந்தன. சுமார், நான்கு தசாப்தங்களில் தற்போது 70 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இலங்கையில் குளிர்மையான சீதோஷணத்திற்க்குப் பெயர் போன நுவரெலியா மாவட்டத்தின் இதமான குளிரோடு இங்கு மேற்படி பள்ளின, சமய, சமூக மக்களும் இன ஐக்கியம், சமய, சமூக சௌஜன்யத்துடன் வாழ்ந்து வருவதும் உடலோடு உள்ளத்தையும் குளிர்மை யடையச் செய்கிறது. விகாரை, கோவில், பள்ளிவாசல் களில் கிடைக்கும் ஆன்மீக அமைதியே இத்தகைய இன ஒற்றுமைக்கு ஊன்றுகோல் என்பதில் மிகையாகாது. இன்று விழாக்கோலம் பூண்டுள்ள புதுக் கட்டடப் பள்ளிவாசல் கம்பீரமாக காட்சிதருவதற்கும் இனங்கள் ஒற்றுமையாக நிகழ்வதற்கான மற்றொரு சான்றாகும்.
மஸ்ஜிதுப் பலாஹ் பள்ளிவாசல் இன்று நவீன அமைப்பில் அழகாகவும் கம்பீரமாகவும் காட்சி தருகிற இச்சந்தர்ப்பத்தில், பள்ளியின் உருவாக்கத்தில் ஆரம்பகால கட்டத்தில் முன்னின்று உழைத்த நம் முன்னோர்களை நினைவுபூர்வது மிகவும் இன்றியமையாததாகும்.
அன்றிருந்த சிறு கூட்டத்தினர் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒருதுமையாக கைகோர்த்து நின்று பள்ளிக்கட்டடத்தைக் கட்டுவதில் கால நேரங்களைத் தியாகம் செய்து புரிந்த அர்ப்பணிப்புகளுக்கு சுவர்க்கத்தில் உயரிடம் கிடைக்க பிரார்த்திப்போம்.
அந்த தியாகிகள் வரிசையில் குறிப்பிட்ட சிலரின் பெயர்களைப் பதிவு செய்வது நல்லதல்லவா? அவற்றுள் முக்கியமான ஆ. அப்துல் காதர், ஐ. அக்பர், அமீர்தீன், கே. ஹாஜி முகம்மத், எஸ். மஜீத், எம். ஜிப்ரி மௌலவி, பி. பஹர்தீன், நைனா முகம்மத், மதார் – சாஹிப், எம். காசிம், பீ.எம். ஹஸன், மற்றும் ஊர் பெயர் குறிப்பிடாத ஊர் ஜமாத்தினம்…
மேலும் அன்றிருந்த தோட்ட முகாமையாளர்களான- மதிப்பிற்குரிய நிஹ்ரா மற்றும் ரியாத் ஆகியோரும் பள்ளி கட்டிடம் எழுப்புவதில் கை கொடுத்துதவியுள்ளனர்.

மேலும் இவர்களால் ஏழு பேர்சல் காணி பள்ளிக் கட்டிடம் அமைக்க கொள்முதல் வழங்கப்பட்டமையும் வரலாற்றில் மறக்க முடியாததாகும். அந்த இடத்திலிருந்த தேயிலைச் செடிகளை அகற்றி, துப்புரவு செய்து, குறுக்கிட்ட பல்வேறு கடிட நஷ்டங்களையும் தாண்டி, நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டமையும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியதே! 1989 இல் பள்ளி கட்டிடத்துக்கான அடிங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊர் ஜமாஅத்தார்களும் தோட்ட மக்களும் இணைத்து, தம்மாலான பணிகளில் ஈடுபட்டனர். அத்துடன் இயன்ற நன்கொடைகளையும் வழங்கி உதவினர்.
1989 டிசம்பர் 17 ஆம் திகதி பள்ளி ‘வகுப்’ செய்யப்பட்டது. அன்றைய நிலையில் கட்டிடம் எழுந்து நிற்க பலவாறும் பங்களிப்புச் செய்த முன்னோர்களின் விடாமுயற்சி, உழைப்பு, தியாகத்தோடு, அவர்களிடம் காணப்பட்ட ஒற்றுமை, தக்வா எனும் இறைச்சம் போன்ற அருங்குணங்களுக்கு அல்லாஹ் அளப்பரிய நற்கூலிகளை வழங்க வேண்டுமென இந்தச் சந்தர்ப்பத்தில்ப் பிரார்த்திப்போம்.
ஆரம்ப காலம் முதல் இன்று வரையிலும் பணிபுரிந்தவர்களுள் ஹஸ்னி முபாரக் மௌலவி (கொலோணியா) அவர்கள் மேற்கொண்ட ஓதுழைப்புக்களும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
1989 முதல் 2026 வரை பள்ளிவாசலைப் பரிபாலனம் செய்த நல்லுள்ளங்களையும் பள்ளியின் பேஷ் இமாம்களாகவும் முஅத்தின்களாகவும் சிறப்பாகக் கடமையாற்றிய, கண்ணியத்திற்குரியவர்களையும் நினைவு கூர்ந்து அவர்களின் பணிகளை அல்லாஹ் அங்கீகரித்து நன்மைகளைச் சிறிய துஆ கேட்போம்.
[அன்றும் இன்றும் இடம்பெற்ற செயற் திட்டங்கள், சில…]
• மஸ்ஜித் கட்டப்பட்டு மினாராகளும் எழுப்பப்பட்டன.
• ஒலி பெருக்கி வசதி செய்யப்பட்டது.
• ஜனாஸா நல்லடக்கத்திற்காக வழங்கப்பட்ட காணியைச் சுற்றிவர கொங்ரீட்
• தூண்கள் நிறுவுதல்.
• வுளு செய்வதற்கு (கவழ்) தடாகம் அமைத்தல்.
• கழிவறை – மலசல கூடம்.
• சமையல் அறை.
• பள்ளியில் தொழுதுகை நடத்தும் பேஷ் இமாம்கள் தங்கும் விடுதி.
• குர்ஆன் மத்ரஸாவுக்கான மண்டபம்.
• பெண்கள் தொழுகைகளுக்கான ஒழுங்கிகள் – மேல்மாடி.
• ஜனாஸாக்களை தூக்கிச் செல்லும் சந்துக்.
• தடைப்படாத நீர் தேவைக்கான ஒழுங்கிகள்.
இவை உள்ளிட்ட இன்னும் சில….
[தர்ஹா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையத்தின் மகத்தான பணிகளில் சில…]
தேன் சிந்தும் கொடை வள்ளல்கள், பரோபகாரிகள் காலத்துக்குக் காலம் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் தென் இலங்கையின் குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் தர்ஹா நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட வரை கலாநிதி நஜீப் பின் அமீர் ஆலிம்.
சுமார் 7-8 தசாப்தங்களுக்கு முன்னர் பிரித்தானியரால் ரப்பர் கிங் எனப் போற்றப்பட்ட ஈ. எல். ஹாஜியார், அதன் பின் நலீம் ஹாஜியார், அவரைத் தொடர்ந்து ஸேம் ரிபாய் ஹாஜியார்… அந்த வரிசையில் இன்று நஜீப் ஹாஜியார் தொண்டினைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
சமூக நலம் ஓம்பும் பணிகளுக்கென்றே தர்ஹா நகர் லோட்டஸ் வீதியில் இவரும் மனைவி மக்களும் ஒன்றிணைந்து காணியொன்றை வாங்கி, ‘நஜீப் ஹாஜியார் கல்வி நிலையம்’ என்ற பெயரில் பலதுறை பணிகள் பரப்பும் பெரிய கட்டிடத் தொகுதியொன்றை நிறுவியுள்ளார்.
இதன் ஊடாகவே தனது பிரதேசம், மாவட்டம், மாகாணம் என்று தொடர்ந்து இன்று நாட்டின் பல பகுதிகளிலும் தனது பொதுத் தொண்டினைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இலங்கையின் சளிம் பிரதேசமாக விளங்கும் நுவரெலியாவில் கந்தப்பொலியில் மஸ்ஜிதுப் பலாஹ் பள்ளியின் விஸ்தரிப்பு, புனரமைப்பு என்று பணியைப் பூர்த்தி செய்து திறந்து வைக்கிறார்.
ஆரம்ப கட்டத்தில் தனது பிரதேசத்தில் பள்ளிகள், அரபு மத்ரஸாக்கள் நிர்மாணம், புனரமைப்பு என்று ஆரம்பித்த பணிகள் மால்ட்டம் வரையிலும் பரவச் செய்து வந்துள்ளார், அத்துடன் கல்வித்துறையிலும் கால் பதித்து தரம் ஐந்து சித்தியடைந்தப் பிள்ளைகளை ஊக்குவிக்க மதிப்புமிக்க கற்றல் உபகரணங்கள், பாடசாலைப் பைகள், பாதணிகள் வழங்கி வருகிறார். சாதாரணதரம் உயர்தரம் மற்றும் உயர் கல்வியைத் தொடர புலமைப் பரிசில் வழங்கவும் செய்கிறார்.
இவற்றுக்குப் புறம்பாக ஓரிடத்திலிருந்து மற்றொழு இடத்திற்கு ஜனாஸாக்களைக் கொண்டு செல்வதற்கான இலவச போக்கு வரத்து வேன் வண்டியொன்றை சேவையில் அமர்த்தியுள்ளார்.
இவற்றுக்குப் புறம்பாக மேத்த கல்வியலாளர்கள், பிற சமூக சேவையாளர்கள் போன்ற பலருக்கு தனது வைபவங்களின் போது கெௌரவிப்பு நிகழ்வுகளையும், வழங்கி வாழூவாரை வாழ்த்தவும் செய்கிறார்.
(பேருவலை பி. எம். முக்தார்)
