உள்நாடு

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய தடை

பயிற்சி ஓட்டுநர் (‘L’) பலகைகளைக் கொண்ட வாகனங்கள் மற்றும் பயிற்சி ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் இயக்கும் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மீண்டும் நினைவூட்டியுள்ளனர்.

பயிற்சி ஓட்டுநர் அனுமதிப்பத்திரம், ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்காக மட்டுமே வழங்கப்படுவதுடன், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்த அதனால் அனுமதி கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்ட செல்லுபடியாகும் முழுமையான ஓட்டுநர் உரிமம் கட்டாயம் எனவும், முழு உரிமம் பெற்ற ஓட்டுநர் அருகில் இருந்தாலும் ‘L’ பலகையுடன் உள்ள வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்களில் இவ்வாறான வாகனங்கள் தடுக்கப்படுவதுடன், விதிமுறைகளை மீறி நுழையும் சாரதிகள் மீது அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

சட்டவிரோதமாக வாகனம் இயக்கப்படும் சந்தர்ப்பங்களில் விபத்து ஏற்பட்டால், அதற்கான காப்புறுதி இழப்பீட்டு கோரிக்கைகளும் நிராகரிக்கப்படக்கூடும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு, பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிவேக நெடுஞ்சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *