உள்நாடு

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு கென்ய நாட்டின் முன்னாள் தூதுவர் விஜயம்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பௌதீக வள அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக செல்வந்தரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும் கென்ய நாட்டின் முன்னாள் தூதுவருமான எச்.எம்.பாறூக் விஜயமொன்றை மேற்கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் அழைப்பின் பேரிலே கென்ய நாட்டின் முன்னாள் தூதுவர் மற்றும் அவரது மகன் ஆகியோர் பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எம்.நௌஸாத் தலைமையில் இடம்பெற்றதுடன் இப்பாடசாலை பெண்கள் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை என்பதோடு, வருடாவருடம் சிறந்த பெறுபேற்றை ஈட்டித்தரும் பிரபல பாடசாலையாகவும் கல்முனை பிரதேசத்தில் திகழ்கின்றது.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கடந்த கால ஆட்சியாளர்களால் எவ்வித அபிவிருத்திகளும் செய்யப்படாதிருந்த இப்பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களது முயற்சியினால் கென்ய நாட்டின் முன்னாள் தூதுவர் எச்.எம்.பாறூக் மற்றும் அவரது மகன் தொழிலதிபர் சாமில் பாறூக் ஆகியோரின் வருகை மூலமாக 02 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைத்து தருவதற்கு இதன்போது ஒப்புதல் வழங்கப்பட்டது.

பின்னர் இவர்களது வருகையின் நினைவாக பாடசாலை வளாகத்தில் மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

இதேவேளை விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையான சாய்ந்தமருது அல்ஜலால் பாடசாலைக்கு சுற்று மதில் அமைப்பதற்காக ஏழு இலட்சம் ரூபாய் நிதி வழங்குவதற்கும் இவர்களினால் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.

ஆசிரியைகள், மாணவிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *