உள்நாடு

இலங்கை – வாழைச்சேனை நபர் துபாயில் மரணம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை வை.எம். எம். ஏ. வீதியைச் சேர்ந்த இப்றாஹீம் முஹம்மட் அஸீஸ் என்பவர் ஞாயிற்றுக்கிழமை (2) துபாய் நாட்டில் மரணமடைந்துள்ளார்.

இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் காரணமாக துபாய் நாட்டிற்குச் சென்றவரே அங்கு மரணமடைந்துள்ளார்.

45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், ஆறு மாதங்களுக்கு முன்னர் துபாய் நாட்டிற்க்குச் சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

துபாயில் மரணித்த குறித்த நபரின் ஜனாஸா அந் நாட்டிலேயே நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் மேலும் தெரிவித்தனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *