ரிதீகம வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு திறப்பு
கிராமப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசினால் முன்னெடுக்கப்படும் வேலை திட்டத்திற்கமைய கு/ ரிதிகம பிரதேச வைத்தியசாலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தி குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. எம். அஸ்லம் இதனை திறந்து வைத்த பின் அங்கு அவர் உரையாற்றுவதையும் ரிதிகம பிரதேச சபை தலைவர் மற்றும் சுகாதார அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



மாத்தளை எம்.சதூர்தீன்
