உள்நாடு

உதயம் பத்திரிகையின் ஊடக அனுசரணையில் சிறப்பாக இடம்பெற்ற கற்பிட்டி வரலாற்றின் முதலாவது புதுக்கவிதை ‘பனை வீரன்’ நூல் வெளியீட்டு விழா

கற்பிட்டி தியாகராஜா மகேந்திர பாஸ்கர் எழுதிய புதுக் கவிதை நூலான பனை வீரன் கற்பிட்டி வரலாற்றில் வெளிவந்த முதலாவது புதுக் கவிதை நூலாகும் .

கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷன் வெளியீட்டுள்ள இக் கவிதை நூலின் வெளியீட்டு விழா ஜுலை (24) வெள்ளிக்கிழமை நஷ்ர் பவுண்டேஷன் தலைவர் எம்.ஏ.சீ.ஏ முத்தலிப் தலைமையில் கற்பிட்டி அக்ஷரா வரவேற்பு மண்டபத்தில் உதயம் பத்திரிகையின் ஊடக அனுசரணையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஓய்வுபெற்ற முன்னாள் புத்தளம் வலய கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.டி.எம் பைரூ சமான் கலந்து கொண்டதுடன் விஷேட விருந்தினராக ஓய்வுபெற்ற முன்னாள் கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல் நூஹூ லெப்பை கலந்து கொண்டார். அத்தோடு,
கௌரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை அதிபர்களான கற்பிட்டி அல் – அக்ஸா தேசிய பாடசாலையில் கடமையாற்றிய எம்.பீ.எம் றோஸ் புஹாரி, மௌலவி எம்.ஏ.சீ இப்றாஹீம், கற்பிட்டி அல் – ஹிரா ஆரம்ப பாடசாலையில் கடமையாற்றிய ஓய்வுநிலை அதிபர்களான எஸ் எம் ஐயூப், எம்.ஐ.எம் அஷரபு அலி, கற்பிட்டி முகத்துவாரம் முஸ்லிம் வித்தியாலய ஓய்வுநிலை அதிபர் எஸ்.ஐ.எம் ஆஸ்தீன் குறிஞ்சிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய ஓய்வுநிலை அதிபர் ஏ.எச்.எம் கலாம், நாவக்காடு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கடமையாற்றிய ஓய்வுநிலை அதிபர் எஸ்.எம் நியூட்டன், கற்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றிய ஓய்வுநிலை அதிபர் டப்ளியூ.பீ சஹீலா
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கற்பிட்டி தியாகராஜா மகேந்திர பாஸ்கர் எழுதிய முதலாவது கவி பிரசவமாக வெளியீடப்பட்ட பனை வீரன் கவிதை நூலின் திறனாய்வு கவிஞரும் புத்தளம் ஐ. மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் பணிப்பாளருமான எஸ்.ஏ.சீ.பீ மரைக்காரின் பார்வையில் சிறப்பாக இடம்பெற்றது

முதல் பிரதி நூலாசிரியரின் தாயான சின்னய்யா அமராவதிக்கு மகன் நூலாசிரியர் கவிஞர் தியாகராஜா மகேந்திர பாஸ்கர் வழங்கி வைத்தார்.

கவிஞர் தியாகராஜா மகேந்திர பாஸ்கரின் பனை வீரன் புதுக் கவிதை நூலை தொகுத்த கற்பிட்டி சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் எச் எம் சியாஜ், கவிஞர் தியாகராஜா மகேந்திர பாஸ்கரை வாழ்த்தி எழுதிய வாழ்த்து பா நினைவுச் சின்னம் வழங்கியதுடன் கிராம உத்தியோகத்தர் எம்.பீ.எம் அர்ஷத் பொன்னாடை போர்த்தி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *