அப்துல் கலாமின் இலட்சியங்களை பின்பற்றுவோம் – மு. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. அழைப்பு
மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி நினைவேந்தல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில், “உன் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற அப்துல் கலாமின் புகழ்பெற்ற மேற்கோளை நினைவுகூர்ந்த அவர், அறிவு, கடின உழைப்பு, நேர்மை, உண்மை மற்றும் தியாகம் ஆகிய உயர்ந்த பண்புகளால் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய மகத்தான தலைவராக அப்துல் கலாமைப் பாராட்டினார்.
மேலும், “இந்தியாவின் பெருமையை உலகிற்கு உணர்த்திய இரண்டாவது காந்தி” என அப்துல் கலாமை புகழ்ந்த அவர், அவரது உயரிய சிந்தனைகள், கனவுகள் மற்றும் இலட்சியங்களை அனைவரும் பின்பற்றி கொண்டாட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இர்ஷாத் றஹ்மதுல்லாஹ்
