உள்நாடு

காலஞ்சென்ற மௌலவி ஹனஸ் மொஹிதீன் அவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளைகளின் சார்பில் ஆழ்ந்த அனுதாபம்

புத்தளம் மௌலவி அஷ்ஷெய்க் ஹனஸ் மொஹிதீன் (நளீமி) அவர்களின் வபாத் செய்தி அறிந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் நகரக் கிளைகள் சார்பில் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் மற்றும் புத்தளம் நகரக் கிளையின் முன்னாள் செயலாளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

சமூகத்திற்கும், கல்வித்துறைக்கும், உலமாக்கள் அமைப்பிற்கும் மார்க்கப் பணிகளுக்கும் தனது அர்ப்பணிப்பான சேவைகளை வழங்கிய அன்னாரின் மறைவு உலமாக்கள் சமூகத்திற்கும் புத்தளம் முஸ்லிம் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னார் இவ்வுலகில் ஆற்றிய அனைத்து நற்பணிகளையும் ஏற்றுக்கொண்டு, அவருடைய பாவங்களை மன்னித்து, கப்ருடைய வாழ்க்கையை ஒளிமயமானதாக ஆக்கி, உயர்ந்த சுவனபதியான ஜன்னத்துல் பிர்தவ்ஸை நசீபாக்கி கண்ணியப்படுத்துவானாக.

அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் இத்துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய அழகிய பொறுமையையும், மன அமைதியையும் அல்லாஹ் வழங்குவானாக என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *