உலகம்

மு.க.ஸ்டாலின் சுமந்திரன் எம்.பி.சந்திப்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கை முன்னாள் எம்.பி. சுமந்திரன் புதன்கிழமை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இது தொடர்பாக திமுக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை (22) புதன்கிழமை காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி மூத்த தலைவருமான எம்.ஏ.சுமந்திரன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *