பேருவளை, மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளியில் இன்று கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வு
இலங்கை திருநாட்டில் ஷாதுலியா தரீக்கா எனும் ஆண்மீக வழிமுறையை அறிமுகம் செய்த ஆத்மீக ஞானி சங்கைக்குறிய அஷ்ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் பெரிய மௌலான (ரஹ்) அவர்களின் ஞாபகர்த்த கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வு 21ம் திகதி (21.07.2026) செவ்வாய்க் கிழமை மாலை அஸர் தொழுகையின் பின்னர் (1100 ஆண்டுகள் பழமைமிகு) இலங்கையின் முதலாவது பள்ளிவாசலான வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலுடன் இணைந்த சாதுலியா ஸாவியாவில் நடைபெறும்.
ஷாதுலிய்யா தரீக்காவின் உலக ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய சேஹ{ஸ் ஸஜ்ஜாதா அஷ்ஷெய்ஹ் மஹ்தி அப்துல்லாஹ் அல்பாஸி அல் மக்கீ அஷ்ஷாதுலி நாயகம் காலி அலிய்யா அரபுக் கல்லூரி பணிப்பாளர் கலீபத்துல் குலபா மௌலவி அல் ஹாஜ் எம்.இஸட்.எம் முஹம்மத் ஆலிம் (பாரி) ஆகியோரின் அனுமதியின் கீழ் ஜமாஅத் சபைத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல் ஹாஜ் எம்.ஏ.எம் ஹனபியின் வழிகாட்டலின் கீழ் கலீபதுஷ் ஷாதுலிகளான மௌலவி அல் ஹாஜ் எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி), மௌலவி அல் ஹாஜ் எம்.ஜே.எம் பஸ்லான் ஜெஸூல் (அஷ்ரபி – யமனி, பீ.ஏ) ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் நடைபெறவுள்ளமை குறிப்பிட தக்கது.
கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல் ஹாஜ் எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – யமனி, பீ.ஏ) இந்த நிகழ்வில் சிறப்புச் சொற்பொழிவாற்றுவார் என பள்ளிவாசல் நிருவாக சபைச் செயலாளர் அல் ஹாஜ் பயாஸ் ஜெஸூல் தெறிவித்தார்.
அஸர் தொழுகையைத் தொடர்ந்து அல்குர்ஆன் தமாம் வைபவமும் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து வலீபா யாகூத்தியாவும் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஹழரா (திக்ர்) மஜ்லிஸ{ம் அதனையடுத்து மார்க்கச் சொற்பொழிவும் இடம் பெறும்.
இந்த நிகழ்வை மேற்படி பள்ளிவாசல் மற்றும் ஸாவியா நிருவாகம் ஏற்பாடு செய்துள்ளதோடு உலமாக்கள் இஹ்வான்கள் கலந்து கொள்வர்.
(பேருவளை பீ.எம். முக்தார்)
