பொலிஸ் தினத்தையொட்டி கொழும்பு பெரிய பள்ளியில் சமய நிகழ்வு
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 160 வது பொலிஸ் தினம் நேற்று (03) நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது.
பொலிஸ் தின பிரதான நிகழ்வுக்கு மேலதிகமாக நாடளாவிய ரீதியில் உள்ள நான்கு சமயஸ்த்தளங்களிலும் விசேட சமய நிகழ்வுகளும் இடம் பெற்றன. இந்த வகையில் தலைநகர் கொழும்பில் வழமைபோல் கொழும்பு பெரிய பள்ளிவாசலிலும் விசேட சமய நிகழ்வு ஒன்றை கொழும்பு 12 டேம் வீதி பொலிஸ் நிலையத்துடன் இணைந்து நேற்று(03) மாலை ஏற்பாடு செய்திருந்தது.
பள்ளி வாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் டேம் வீதி பொலிஸ் திணைக்களத்தின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி I.P.. ரஸ்மெண்டர, நிலையத்தின் நிருவாகப் பிரிவின் பொறுப்பதிகாரி S.I. பிரியந்த, சுற்றுச் சூழல் மற்றும் சமுக பிரிவுகளின் பொறுப்பதிகாரி S.I. பிரேமரத்தன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், பள்ளிவாசலின் நிதிப் பொறுப்பாளர் A. பஸால் மொஹிடீன், உதவிப் பொருலாளர் ஜவ்பர் சித்தீக் உள்ளிட்ட நம்பக்கையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது வரவேற்புரையை பொருலாளர் பஸால் மொஹிடீன் வழங்கினார், பொலிஸ் திணைக்களத்தின் விசேட உரையை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த வழங்கினார், பொலிஸ் அதிகாரிகளின் சிறப்பாக ஆற்றி வரும் சேவை மற்றும் அவர்களின் நலன்கள் வேண்டியும் நாட்டு மக்களின் அமைதி, சமாதானத்திற்கு மாக் வேண்டியும் விசேட துஆ பிரார்த்தனையை பள்ளிவாசலின் பிரதம இமாம் மெளலவி எஸ்.எம். ரிஸ்வான் பஹ்ஜி வழங்கினார்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
