உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (ஜூன் 25) இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பிற்பகல் 2 மணிக்கு மேல், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *