முஹர்ரம் மாதத்தைத் தீர்மானிக்கும் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று
இஸ்லாமிய புதுவருடமான முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (16) செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக் குழுத் தலைவர் மெளலவி ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இடம் பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள நிகழ்வில் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டல திணைக்கள அதிகாரிகள், ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
