உள்நாடு

உயர் கல்வி மற்றும் தஃவா பணிக்கு AI உள்ளிட்ட நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பில் புத்தளம் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு செயலமர்வு

உயர் கல்வி மற்றும் தஃவா பணிக்கு AI உள்ளிட்ட நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பில் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு தெளிவூட்டும் செயலமர்வொன்று சனிக்கிழமை (13) மாலை இடம்பெற்றது.

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம்.பஸ்லுல் பாரிஸ் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம்.பைரூஸ் வளவாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர் உட்பட இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் கற்பிக்கும் முஅல்லிமாக்கள் மற்றும் மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, உயர்; கல்வி மற்றும் தஃவா பணிக்கு AI உள்ளிட்ட நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்துவது எவ்வாறு எனும் தலைப்பில் வளவாளராக கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம்.பைரூஸ் விஷேட உரையாற்றியதுடன், மாணவிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.

மேலும், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக வளைத்தளங்களால் இளம் சமூகம் எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் எடுத்துரைத்ததுடன், மாணவிகள் அவற்றை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்றும் சமகால உதாரணங்களுடன் முன்வைத்தார்.

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *