உள்நாடு

சிலாபம் மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதல்; இருவர் கைது


சிலாபம் பொது மருத்துவமனையில் பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த மூன்று பாதுகாப்பு ஊழியர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியைப் பார்க்க வந்த மூவர், மருத்துவமனைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும், அதைத் தடுக்க முயன்ற பாதுகாப்பு ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் தாக்குதலாக மாறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *