உள்நாடு

மள்வானையில் ஹஜ் வழிகாட்டல் நேரடி செய்முறை விளக்கம்

எமது “தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான்” மல்வானைக் கிளையின் ஏற்பாட்டில், புனித ஹஜ் கடமை குறித்த விழிப்புணர்வையும் கல்வி அறிவையும் வழங்கும் நோக்கில் “ஹஜ் வழிகாட்டல் நேரடிச் செய்முறை விளக்கம்” என்ற விசேட பிரம்மாண்ட நிகழ்வு எதிர்வரும் ஜூன் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் மல்வானை அல் முபாரக் ஆரம்பப் பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

புத்தகங்கள் வழியே மட்டுமே படித்த ஹஜ்ஜின் கடமைகளை, கஃபத்துல்லாஹ் முதல் ஜம்ரா வரை தத்ரூபமான மாதிரிகள் (Models) மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு நேரடிச் செய்முறையாகக் காட்டுவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

அனுபவம் வாய்ந்த உலமாக்களின் நேரடி விளக்கங்கள், பாடசாலை மற்றும் அஹதிய்யா மாணவர்களுக்கான களப்பயணக் கற்றல் எனப் பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கும், இம்முறை ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஹாஜிகளுக்கும் மிகவும் பயனுள்ள இந்நிகழ்வை, தங்களது புகழ்பெற்ற ஊடகத்தின் வாயிலாக பிரதான செய்தியாக / விசேட நிகழ்ச்சியாக ஒளிபரப்பி (Telecast) உதவுமாறு மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதன் மூலம் பல இலட்சக்கணக்கான மக்கள் பயனடைய வாய்ப்பாக அமையும்.

நிகழ்வின் விபரங்கள்:

2026 ஜூன் 06 (சனிக்கிழமை) & ஜூன் 07 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: சனிக்கிழமை மு.ப 9:00 மணி முதல் பி.ப 6:00 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை: காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

இடம்: அல் முபாரக் ஆரம்பப் பாடசாலை வளாகம், மல்வானை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *