உள்நாடு

சீன அரசினால் கல்முனை பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

கல்முனை அல்-அஷ்கர் பாடசாலையின் வரிய மாணவர்களுக்கு தேவையான புத்தகப் பைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ்.றிஸானா தலைமையில் இன்று (04) இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூரின் அழைப்பின் பேரில் இலக்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு வருகை தந்தார்.

இதன் போது பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கப்பட்டதோடு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு உலருணவுப் பொதிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

“சீன இலங்கை சகோதர பாசம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 03 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பாடசாலை சமூகம் சார்பாக வருகைதந்த அதிதிகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூன், கௌரவ அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சிறப்பு அதிதிகளாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல மற்றும் பல முக்கியஸ்தர்கள், ஊடகவியலாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(ஏ.எச் எம்.ஹாரீஸ்-மத்திய முகாம் செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *