சாந்தா ஜெயராஜ் எழுதிய “உணர்வுகள்” நூல் வெளியீட்டு விழாவில் வாழ்த்துறை வழங்கிய இர்ஷாத் ஹ்மதுல்லா
டாக்டர் சாந்தா ஜெயராஜ் எழுதிய “உணர்வுகள்” நூல் வெளியீட்டு விழாவில் வாழ்த்துறையினை இலங்கையினை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியாளார் இர்ஷாத் ஹ்மதுல்லா வழங்கினார்.
டாக்டர் சாந்தா ஜெயராஜ் எழுதிய “உணர்வுகள்” நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தமிழகத்தின் கும்பகோணத்தினை பிறப்பிடமாகவும், சிறிது காலம் இலங்கை யாழ்ப்பானத்தினை வசிப்பிடமாகவும், தற்போபது அவுஸ்திரேலியாவை நிரந்தர வசிப்பிடமாக கொண்டவர் டாக்டர் சாந்தா ஜெயராஜ்.
தமிழகத்தின் வானதி பதிப்பகத்தினால் இந்த வெளியீட்டு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருத்தன.
தமிழ்த்தாய் வாழ்த்தினை கலைமாமணி முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்கள் பாடினார். வரவேற்புரையினை வானதி பதிப்பகம் பதிப்பாசிரியர் முனைவர் இராமநாதன் அவர்கள் ஆற்றினார்.
விழாத் தலைமையினை இயக்குநர் S.P.முத்துராமன் ஏற்க, நூல் வெளியிட்டு வாழ்த்துரையினை பத்மபூஷன் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் நிகழ்த்தினார்.
நூல் முதல்படி பெற்று வாழ்த்துரை மற்றும்
ஆசியுரையினை திரையுலக நட்சத்திரம்
கலைமாமணி குமாரி சச்சு அவர்கள் வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கத்தின் நிறுவனர்,செவாலியர் டாக்டர் வி.ஜி. சந்தோசமும் வழங்கி வைத்தார்.
நூல் வாழ்த்துறையினை கவிஞசர் கண்ணதாசன் அவர்களின் புதல்வர், கண்ணதாசன் பதிப்பகத்தின் உரிமையாளருமான காந்தி கண்ணதாசனும், நூல் திறனாய்வு சிறப்புரையினை பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி வழங்கினர்.
பாராட்டுரையினை எழுத்தாளர் டாக்டர் லேனா தமிழ்வாணனும், சிறப்பு வாழ்த்துரைகளை முனைவர் திலகவதி மோகன், திருவை பாபு, உலக தமிழ் கலை பண்பாட்டுக் கூடத்தின் சர்வதேச தலைவர் கலாநிதி எஸ். எம். ரஷ்மி ரூமியின் சார்பில் கலந்து கொண்ட இலங்கைக்கான ஊடக இணைப்பாளர் தேசமாணி சிரேஷ்ட ஊடகவியாளார் இர்ஷாத் ரகுமதுல்லா, சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் அலெக்ஸ் ராஜ், ஆன்மீக எழுத்தாளர் பனையபுரம் அதியமான் ஆகியோர் நிகழ்த்தினர்.
ஏற்புரையினை நூலாசிரியர் டாக்டர் சாந்தா ஜெயராஜும்,
நன்றியுரையினை பேராசிரியர் முனைவர்
விஜயலட்சுமி இராமசாமியும் வழங்கினர்.
இந்த நிகழ்வில் அமைப்பின் சர்வதேச பொருளாளர் ஆர் பாண்டியன், சட்ட ஆலோசகர் ஏ ராஜ், சித்ரா பாரதி தமிழ்நாட்டு மகளிர் அணி செயலாளர், அமைப்பின் மாநில துணைத் தலைவர் டாக்டர் பாண்டியராஜன்,இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், சமூக செயபாட்டாளருமான விக்ரமசிங்க உள்ளிட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், துறை சார்ந்தவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து அதிதிகளுக்கும் நூலாசிரியர் டாக்டர் சாந்தா ஜெயராஜினால் சால்வைகள் அணிவித்து நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






