உள்நாடு

லங்கா IOC மற்றும் சினோபெக் ஆகிய எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்களது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன.


இருப்பினும், சினோபெக் நிறுவனம் சுப்பர் டீசல் விலையில் மாத்திரம் எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன், அவர்கள் தற்போதும் ஒரு லீற்றர் சுப்பர் டீசலை 600 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.


நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான எரிபொருட்களினதும் விலைகளை அதிகரிக்க  பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்தது.


அதன்படி: 410 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 24 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 434 ரூபாய் ஆகும்.


அதேபோல், 470 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 495 ரூபாய் ஆகும்.


மேலும், 392 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 407 ரூபாய் ஆகும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


458 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 20 ரூபாய் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 478 ரூபாய் ஆகும்.


இதேவேளை, ஒரு லீற்றர் 265 ரூபாயாக இருந்த மண்ணெண்ணெய் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 285 ரூபாய் ஆகும் என லங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *