உள்நாடு

இவ்வருட உழ்ஹிய்யா (குர்பானி) கிரியைகளை நிறைவேற்றல் தொடர்பில் பொதுமக்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்

பொது நிர்வாக அமைச்சின் 07.05.2026ஆம் திகதிய HA/1/2/වෙසක්/2026ஆம் இலக்க சுற்றுநிருபத்திலிருந்து மே மாதம் 30, 31 ஆகிய தினங்கள் தவிர்ந்த மார்க்கம் அனுமதித்துள்ள ஏனைய நாட்களில் உழ்ஹிய்யா கொடுப்பதில் தடையில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் காலாகாலமாக நிறைவேற்றிவரும் இந்த மார்க்க கடமையை அதே கண்ணியத்துடன் நிறைவேற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் இதற்குரிய ஜம்இய்யாவின் மார்க்க வழிகாட்டல்களை பேணி நடக்குமாறும் அவற்றை உரிய காலத்தில் அறிவிப்போம் எனவும் தெரிவிக்கிறோம்.

அந்தவகையில், எதிர்வரும் 17ஆம் திகதி துல்-ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கப்படவுள்ளது. அன்றைய தினம் தலைப்பிறை தென்பட்டால், ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகிய எதிர்வரும் 27 மற்றும் 28, 29 ஆகிய திகதிகளில் மாத்திரம் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுமாறும், 17ஆம் திகதி தலைப்பிறை தென்படவில்லை எனில் பெருநாள் தினமாகிய 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரம் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுமாறும் ஜம்இய்யா வழிகாட்டுகிறது.

இஸ்லாம் வலியுறுத்தும் இந்த முக்கிய இபாதத்தை பொறுமை, சமூக உணர்வு மற்றும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமூகத்தினரிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *